புதுமண்டபம் பழைய வரலாறு (பகுதி - 2)
• கி.பி.1736ல் நாயக்கர்கள் வீழ்ச்சியுற்ற பின் பல அரசியல் மாற்றங்கள் ஏற்ப்பட்டன. அதனைத்தொடர்ந்து கி.பி.1801ல் பிரிட்டிஷாரின் ஆளுமையின் கீழ் மதுரை சென்றது. ஆங்கிலேயர்கள் இவ்விடத்தின் கலைப் பொருட்களை வளர்க்காவிட்டாலும், அழிக்கவில்லை. ஆடித் திருவிழா, வைகாசித் திருவிழா, எண்ணெய்க் காப்புத் திருவிழா எனப் பல திருவிழாக்கள் நடைபெற்ற புதுமண்டபத்தில் கி.பி.1920-ம் ஆண்டுக்குப் பிறகுதான் ஒவ்வொரு கடையாக வந்தன. தற்போது, சுமார் 250 - 300 கடைகள் இங்கே இருக்கின்றன. ஒரு காலத்துல புத்தகக்கடைகள் எல்லாம் புதுமண்டபத்துல தான் இருந்தது. கி.பி.19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொடங்கி கி.பி.1940கள் வரைக்கும் மிக அரிய நூல்களை வெளியிட்ட பதிப்பகங்கள் எல்லாம் அங்கே கடைகளை வைத்திருந்தார்கள். அன்றைக்கு பல கோயில்களின் தலபுராணங்கள், தமிழ் இலக்கியம், இலக்கணம், நாட்டார் கதைப்பாடல்கள் மற்றும் தத்துவ நூல்களை வெளியிட்டவர்கள் இன்றும் கடைகளை வைத்திருந்தார்கள். • ¶|| "பு து ம ...