Posts

கோதையின் கீதை (பகுதி - 24)

Image
🔷  கண்ணாடி மாளிகை 🔷 ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலின் த்வஜஸ்தம்ப மண்டபத்தில் வடபுறப்பகுதியில் இந்த கண்ணாடி மாளிகை உள்ளது. வேறு எந்தக் கோயிலிலும் இப்படி இல்லையென்று கூறுமளவிற்கு மிகவும் எழிலார்ந்த அமைப்புடன் இம்மண்டபம்  உள்ளது. இதனை இரண்டு லட்சம் செலவில் 🔸கோயம்புத்தூர் விஜயலட்சுமி மில்ஸ் அதிபர் ஸ்ரீமான் V.L. பாலகிருஷ்ண நாயுடு  - B. ஜானகியம்மாள் தம்பதியனர் நம் கோதை ஆண்டாளின் உகப்பிற்கினியவாறு (30-07-1985 அன்று) கட்டிக்கொடுக்கப்பட்டது. இந்த கண்ணாடி மாளிகையின் உள்ளே  ஸ்ரீஆண்டாள் ஸ்ரீரங்கமன்னார் எழுந்தருள்வதற்கான நாலுகால் குறடு உள்ளது. அதன் தூண்கள் உள்பட. மண்டபத்தின் தாழ்வாரம் ஆகிய எல்லாப் பகுதிகளும் கண்ணாடி வேலைப்பாடுகள் தாம்.  7 1/2 அடி உயரமும் 3  1/2 அடி அகலமும்  உள்ள பல நிலைக் கண்ணாடிகளை இணைத்துள்ளார்கள்.  இம்மாளிகையின் வாயிலில் கருங்கல் பளிங்கினால்  செதுக்கப்பெற்ற இரண்டு யானைகள் உள்ளன. மாதந்தோறும் வரும் இரண்டு ஏகாதசிகளில் ஸ்ரீஆண்டாள் சமேத ரங்கமன்னாரை இக் கண்ணாடி மாளிகையில் எழுந்தருளச்செய்து, ஒன்பது கும்பங்கள் வைத்து அ...

கோதையின் கீதை (பகுதி - 23)

Image
ஆண்டாளின் பிறபெயர்கள்:ஆண்டாளின் இயற்பெயர் கோதை. இதற்கு பூமாலை என்று பொருள். இவளுக்கு சூடிக்கொடுத்த சுடர்க்கொடி, ஆண்டாள், பட்டர்பிரான் புதல்வி, திருப்பாவை பாடிய செல்வி, வேயர்குல விளக்கு, ஶ்ரீரங்கமஹிஷி, புதுவையர்கோன் விட்டுசித்தன்கோதை, சீலத்தனள், தென்திருமல்லிநாடி, புதுவையர்கோன் பட்டன்கோதை, குழற்கோதை, புதுவைமன்னன் பட்டர்பிரான்கோதை, வில்லிபுத்தூர்கோன் கோதை, சுரும்பார் குழற்கோதை, விட்டுசித்தன்வியன் கோதை, வில்லைத்தொலைத்த புருவத்தாள், ஶ்ரீவிஷ்ணுசித்த குலநந்தன கல்பவல்லீ, கோதா விஷ்ணு சித்தாத்மஜா, ஶ்ரீதந்விநவ்யபுரவாஸினி, வைதிக விஷ்ணுசித்த தநயா, ஶ்ரீரங்கபதிதேவி, ம்ருதுவாணி, நூதனநகரஸ்திதா, நூதனபுரநாயகி, ரங்கஜீவிகா,ஶ்ரீரங்கநாயகி, கோபீவேஷதரா, துளசிவன ஸஞ்ஜாதா, பட்டநாதப்ரியா, க்ருஷ்ணாயுத போகி, ரங்கநாதப்ரியா, யதிராஜ ஸகோதரி,துர்லபஶ்ரீ ஸுலக்ஷணா, தநுர்மாஸ க்ருத வ்ரதா, நாராயணபதாஶ்ரிதா, திருவாடிப்பூரத்துச் செகத்துதித்தாள், திருப்பாவை முப்பதும்செப்பினாள், பெரும்பூதூர் மாமுனிக்கு பின்னானாள், ஒருநூற்றுநாற்பத்து மூன்றுரைத்தாள், உயரரங்கர்க்கே கண்ணியுகந்தளித்தாள், திருமல்லிவளநாடி, வண்புதுவை நகர...

கோதையின் கீதை (பகுதி - 22)

Image
🔸🔷🔶  நாச்சியார் திருமாளிகை:- 🔶🔷🔸 ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஆண்டாள், தான் அணிந்திருக்கும் மாலையில் 108 திவ்யதேசங்களில் அருளும் பெருமாள்களை மாலையாக அணிந்திருப்பதாக ஐதீகம். ஆண்டாள் கோயில் கருவறையைச் சுற்றி முதல் பிரகார சுவர்களில் 108 திவ்யதேச பெருமாளின் உருவங்கள் ஓவியமாக வரையப்பட்டுள்ளது. இந்த ஓவியத்தில் திருப்பாற்கடல், வைகுண்டம் பெருமாள் உட்பட அனைத்து பெருமாளையும் தரிசிக்கலாம்.                 ஸ்ரீஆண்டாள் சன்னதியில் உற்சவ மூர்த்திகள் எழுந்தருளியிருக்கும் மண்டபம், "கனக சமர பூபாலனம்" (முத்துப்பந்தல்) எனப்படுகிறது. இதில் வாழைமரம், மாவிலை மற்றும் பூச்செண்டும் இருக்கிறது. மேலே திருமாலின் பாதம் இருக்கிறது. திருப்பாவை 30 பாசுரங்களையும், நினைவுறுத்தும்படி 30 தங்க மாவிலைகள் இம்மஞ்சத்திலே கட்டப்பட்டுள்ளன. ஒரு இலைக்கும் மற்றொரு இலைக்கும் இடையே ஒரு பூச்செண்டு உள்ளது. பெருமாள் தலங்களில் கருடாழ்வார், சுவாமி சன்னதியின் எதிரே அவரை நோக்கி வணங்கியபடிதான் இருப்பார். ஆனால், இத்தலத்தில் பெருமாளுக்கு அருகிலேயே வணங்கிய கோலத்தில் இருக்கிறார். (இத்தலத்தில் ...

கோதையின் கீதை ( பகுதி - 21)

Image
திருவரங்கம் பெரியகோயிலில் ஸ்வாமி கூரத்தாழ்வான் திருக்குமாரனாகிய  'பராசர பட்டர்' தர்சன ப்ரவர்த்தகராயிருந்த நாளில் ஏழு திருச் சுற்றுக்களில் ஆறாவது திருச்சுற்றான திரிவிக்கிரமன் திருவீதித் திருமதிள் மிகவும் பாழ்பட்டு சரிந்துவிழ, அதனைச் சீர்படுத்திக் கட்டுவிக்கத் தொடங்கிய வீரசுந்தர பிரஹ்மராயன் எனும் சிற்றரசன் அந்த மதிளின் நேர்மைக்கு மாறாகப் பிள்ளைப்பிள்ளையாழ்வானுடைய திருமாளிகை குறுக்கிட்டு இருப்பது  கண்டு முன்போலே மதிளை ஒதுக்கிக் கட்டாமல் அவர் திருமாளிகையை இடித்து நேரொழுங்காகத் திருமதிள்கட்டுவிக்க முயன்றான். அப்படிச்செய்வது சரியன்று என்று  பட்டர் தடுத்ததையும் கேளாமல், பிள்ளைப்பிள்ளையாழ்வானுடைய திருமாளிகையை இடித்துக் கட்டுவித்தான். இதனால் பட்டருக்கும், அவ்வரசனுக்கும் உண்டான மனஸ்தாபம் நாளடைவில் அதிகரிக்க, அவனுடைய உபத்திரவம் பொறுக்காமல், பட்டர் திருக்கோஷ்டியூருக்கு எழுந்தருளினார்.  பெரியபெருமாளை பிரிந்ததினால் ஏற்ப்பட்ட துக்கத்தைத் தணிப்பதற்காக பட்டரை அவருடைய சிஷ்யரான "நஞ்ஜீயர்" கோதை ஆண்டாளை ஒரு ச்லோகத்தாலும், ஆழ்வார்களை ஒரு ச்லோகத்தாலும் துதிக்கவேணும் என்று வேண்டினார...

கோதையின் கீதை (பகுதி - 20)

Image
🔸 நப்பின்னை வைபவம் 🔸 திருப்பாவையில் மூன்று பாடல்களில் தொடர்ந்து(18,19,20) கோதை ஆண்டாள் தொல்குடியான ஆயர்குல நப்பின்னையை கூறுகிறாள். வேறு எந்தப் பிராட்டியின் பெயரையும் சொல்லவில்லை. கோதை ஆண்டாள் தன்னை ஆயர்குலத்தில் பிறந்தவளாகக் கருதிக்கொண்டு, பாவை நோன்பு இருப்பதால், இயல்பாகவே அவளுக்கு ஆயர்குலத்தில் பிறந்த நப்பின்னையின் மீது தனிப் பிரியம் ஏற்படுவது இயல்பு அல்லவா? 🔵  நப்பின்னை என்பது யார்? யசோதையின் சகோதரனான கும்பன் என்ற நக்னஜித் அயோத்தியின் மன்னனாக இருந்தான். அவனுடைய மகளை சத்யா, சௌந்தர்யவதி என்றும் நக்னஜிதை என்றும் அழைத்தனர். இவள்தான் நப்பின்னை என்று வைணவப்பெரியோர் கருதுகின்றனர். இவள் கிருஷ்ணனுக்கு மாமன் மகளாகிறாள்.              நக்னசித்து வளர்த்துவந்த அடங்காக் காளைகள் ஏழினை, மிக நுட்பமாக ஏறுதழுவல் மூலம் வென்று, கண்னன் நக்னஜித் கரம்பிடித்தான். நக்னசித்திக்கு, வீரன், சந்திரன், அசுவசேனன், சித்திராகு, வேகவான், விருசன், ஆமன், சங்கு, வசு, குந்தி என பத்து மைந்தர்கள். இருந்தனர் என்றும்,  "பத்திரவிந்தன்" முதலான பல மைந்தர் அவளுக்கு இருந்ததாக...