வெங்கிட்டம்மாள் கைங்கர்யம் (பகுதி - 2)
உலகில் உள்ள ஜீவாத்மாக்களுக்கு முக்தி தந்து அவர்களை ஆட்கொள்ளும் வல்லமை பெற்ற பரமாத்மாவைச் சரண் புக வேண்டும் என்பதுதான் சரணாகதி. ஞானயோகம், பக்தியோகம், கர்மயோகம் ஆகிய மூன்றில் எதேனும் ஒன்றின் மூலம் அல்லது அனைத்தின் மூலமும் பரமாத்மாவை அடைவது எளிது. 'மாமேகம் சரணம் வ்ரஜ' என்று கீதையில் பகவான் ஸ்ரீகிருஷ்ணன் அர்ஜுனனிடம் கூறுகிறார். நானே அனைத்தும் என்று உணர்வாய், உணர்ந்து சரண் அடைவாய், மற்றதை நான் பார்த்துக்கொள்கிறேன் என்கிறார். ஆனால், இந்த சரணாகதியை நேரடியாக ஒருவரால் அடைய முடியாது. ஆசார்யன் என்ற வழிகாட்டி அவசியம். அவர்தான் பரிபூரண பிரம்மத்தை அனுபவிப்பதற்கான சாதனை வழிமுறைகளைச் சொல்லித் தர முடியும் என்கிற உண்மை நிலையை அறிந்த ஸ்ரீமதி வெங்கிட்டம்மாள் திருவரங்கம் பெரியநம்பி திருமாளிகையில் ஆச்சார்ய அபிமானம் பெற்று திருவடி சம்பந்தம் பெற்றுக்கொண்டார். தாம் பிறந்த மதுரை இராமாயணச்சாவடியில் இராமபிரானுக்கும்,ஆயர்குல திலகமாகிய ஸ்ரீநவநீத கிருஷ்ண ஸ்வாமிக்கும் பல கைங்கர்யங்களைச் செய்ததோடல்லாமல் பாகவத ததீயாராதனங்களை வ்ருத்தி செய்தார். இந்தத்