Posts

Showing posts from November, 2018

கோதையின் கீதை (பகுதி - 3)

Image
श्री: श्री श्रियै नम: ॥ श्रीमते रामानुजाय नमः ॥ श्रीशैलेश दयापात्रम् धीभक्त्यादि गुणार्णवं I   यतीन्द्र प्रवणम् वन्दे रम्यजामातरम् मुनिम् II लक्ष्मी नाथ समारम्भाम् नाथयामुन मध्यमाम् I अस्मदाचार्य पर्यन्ताम् वन्दे गुरु परम्पराम् II यो नित्यं अच्युत पदाम्बुज युग्मरुक्म व्यामोहतस् तदितराणि त्रुणाय मेने I अस्मद् गुरोर् भगवतोस्य दयैकसिन्धोः रामानुजस्य चरणौ शरणम् प्रपद्ये  II माता पिता युवतयस् तनया विभूति: सर्वम् यदेव नियमेन मदन्वयानाम् I आद्यस्य न: कुलपतेर वकुळाभिरामम् श्रीमत तदङ्घ्रि युगळम् प्रणमामि मूर्ध्ना II भूतं सरस्य महदाह्वय भट्ट नाथ श्रीभक्तिसार कुलशेखर योगिवाहान्  I भक्ताङ्घ्रिरेणु  परकाल यतीन्द्रमिश्रान श्रीमत् पराङ्कुश मुनिम् प्रणतोस्मि नित्यं II நாலாயிர திவ்வியப் பிரபந்தம்  எனும் நூலில் தொகுக்கப்பட்டுள்ள பிரபந்தங்கள் 24 ஆகும். இவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே 'தனியன் பாடல்கள்" உள்ளன. இவை அப் பிரபந்தங்களுக்குச் 'சிறப்புப் பாயிரம்' போல அமைந்துள்ளன. வைணவர்கள் இந்தத் தனியன்களை பாடிய பின்னரே பாசுரங்களை பாடுவது வழக்கம். சில பிரபந

கோதையின் கீதை (பகுதி - 2)

Image
தேவஸ்ய மஹிஷீம் திவ்யாம் ஆதௌ கோதா முபாஸ்மஹே | யந்மௌலி மாலிகாம் ப்ரீத்யா ஸ்வீகரோதி ஸ்வயம்ப்ரபு: || (எவள் சூடிக்களைந்த மாலையை ஸர்வேஸ்வரனான ப்ரபு உகப்புடன் ஏற்றுக்கொண்டானோ அவ்விஷ்ணுவின் திவ்யமஹிஷியான அத்தகைய கோதையை முதலிலே உபாசிக்கிறோம்.) முக்கூர் லட்க்ஷிமி நரசிம்மாச்சார்யர் எனும் ஓர் ஸ்வாமி கூறிய கதை ஒன்று அடியேனுக்கு தற்போது நினைவில் வருகிறது. ஒருமுறை பொறுமையே உருவான நம் லோகமாதா பூமிப்பிராட்டியிடம்   எம்பெருமான் "ஹே! பூதேவி!  நீ போய் நம் கீதையின் சாரத்தை எடுத்துச் சொல்லி, உலகத்தில் உள்ளவர்களைத் திருத்துவாயா?" என்று கேட்டாராம். "அதற்குத்தானே காத்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறேன் ஸ்வாமி!" என்றாளாம் பூமாதா. அவளுக்கு முன்னதாக மஹாலக்ஷ்மி முடியாது என்று சொன்ன பொறுப்பை பூமாதா உடனே ஏற்றுக் கொண்டுவிட்டாள். அதற்கு சில காரணங்கள் உண்டு. பகவான் மகாலக்ஷ்மியிடம் கேட்ட போது, தான் ராமாவதாத்திலும், கிருஷ்ணாவதாரத்திலும் பட்ட தொல்லைகளைக் காரணம் காட்டி பூமியில் அவதாரம் எடுக்கும் பொறுப்பை மறுத்துவிட்டாள். ஆனால் லோகமாதா பூமிப்பிராட்டியோ "நீங்கள் என்னைப் போகச் சொல்வீர்கள் எ

கோதையின் கீதை (பகுதி - 1)

Image
"மாயோன் மேய காடுறை உலகம்' என சங்க காலத்தில் சிறப்புற்று இருந்த திருமால் நெறியான  மாயோன் மதம் இடைப்பட்ட 'களப்பிரர்' காலத்தில் வலுவிழந்தது. எதிர்த்து வந்த புறச்சமய இடையூறுகளைத் தகர்த்து 'அன்பு நெறி'யாம் அருள்தரும் திருமால் நெறி கி.பி.6,7,8ம் நூற்றாண்டுகளில் ஆழ்வார்களால் உயர்த்திப் பிடித்து அன்பு நெறியாக வளர்க்கப்பட்டது. இந்நிலையில் மக்கள் மதமாக வளர்ந்தது விஷ்ணுவை முழுமுதற் கடவுளாக வணங்கிய வைணவம். அன்றைய சமூகத்தில் 'தீண்டாமை' அதிக துன்பத்தைச் சாதாரண மனிதனுக்குக் கொடுத்தது. அவைகளை நீக்க ஓர் அருளாளர் உதிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அந்நேரத்தில் (கி.பி.1017ல்) விடிவெள்ளியாக உதித்தார் புரட்சித் துறவி ராமானுஜர். தொடக்கத்தில் ஆதிசேஷனாகவும் பின்னர் ராமாவதாரத்தில் இலக்குவனாகவும் கிருஷ்ணாவதாரத்தில் பலராமனாகவும் இருந்து இறுதியில் கலியுகத்தில் மக்களை உய்விக்க வந்த மகானாக - ராமானுஜர் தோன்றினார். வைணவ நெறியை மக்கள் நெறியாக்கிய வித்தகர். சேரியில் வாழ்ந்த மனிதர்களை திருக்குலத்தார் ஆக்கி தெய்வத்தை வழிபட வைத்தவர். இனம் குலம் மொழி வேற்றுமை இல்லாத