Posts

Showing posts from 2019

காலந்தோறும் மதுரை (பகுதி − 1)

Image
🔸மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப் பூவொடு புரையும், சீர் ஊர்; பூவின் இதழகத்து அனைய தெருவம்; இதழகத்து அரும் பொகுட்கு அனைத்தே, அண்ணல் கோயில்; தாதின் அனையர், தண் தமிழ்க் குடிகள்; தாது உண் பறவை அனையர், பரி சில் வாழ்நர்; பூவினுள் பிறந்தோன் நாவினுள் பிறந்த நான்மறைக் கேள்வி நவில் குரல் எடுப்ப ஏம இன் துயில் எழிதல் அல்லதை, வாழிய வஞ்சியும் கோழியும் போலக் கோழியின் எழாது, எம் பேர் ஊர் துயிலே.     நூல்: பரிபாடல் திரட்டு (8) / புறத்திரட்டு (பாடல் விளக்கம்:எமது அழகிய மதுரை, மாயோனது கொப்பூழில் மலர்ந்த தாமரையை ஒக்கும். மதுரையின் தெருக்கள் அத்தாமரையின் இதழ்களை ஒக்கும். மதுரையின் நடுவில் அமைந்துள்ள அண்ணல் கோயில் அம்மலரின் நடுவில் உள்ள தாதை ஒக்கும். சுற்றி வாழும் தண்டமிழ் மக்கள், அந்தத் தாதின் மகரந்தத் தூளை ஒப்பர். அவரை நாடி பரிசில் பெற வரும் இரவலர், அந்த மகரந்தத்தை உண்ண வரும் பறவைகளை ஒப்பர். அந்தத் தாமரைப் பூவின் கண் தோன்றிய பிரம்ம தேவனின் நாவிலே தோன்றிய நான் மறைகளை, வைகறைப் பொழுதில் ஓதும் இசையே, மதுரை மாநகர மக்களாகிய எங்களைத் துயிலேழுப்புமே தவிர , சேரனது வஞ்சியும் , சோழனது கோழியும் (உ

ஶ்ரீகோதை (ஆண்டாள்) அஷ்டோத்திர சதநாமாவளி​

ஶ்ரீகோதை (ஆண்டாள்) அஷ்டோத்திர சதநாமாவளி​ (ஶ்ரீபெரீயாழ்வார் திருவம்சத்தவரான வேதப்பிரான் பட்டர் கேசவாச்சாரியார் அருளியது  ~ கோதா பரிணய சம்பு இயற்றியவர்) ஓம் ஸ்ரீ கோதாயை நம: ஓம் ஸ்ரீ ரங்கநாயக்யை நம: ஓம் விஷ்ணுசித்தாத்மஜாயை நம: ஓம் ஸத்யை நம: ஓம் கோபீவேஷ தராயை நம: ஓம் தேவ்யை நம: ஓம் பூஸுதாயை நம: ஓம் போகதாயிஞ்யை நம: ஓம் துளஸீவந ஸஞ்ஜாதாயை நம: ஓம் ஸ்ரீ தந்விபுரவாஸின்யை நம: ஓம் பட்டநாதப்ரியகர்யை நம: ஓம் ஸ்ரீ கிருஷ்ணாயுத போகின்யை நம: ஓம் ஆமுக்தமால்யதாயை நம: ஓம் பாலாயை நம: ஓம் ரங்கநாதப்ரியாயை நம: ஓம் வராயை நம: ஓம் விஶ்வம்பராயை நம: ஓம் கலாலாபாயை நம: ஓம் யதிராஜஸஹோதர்யை நம: ஓம் க்ருஷ்ணாநுரக்தாயை நம: ஓம் ஸுபகாயை நம: ஓம் துர்லபஸ்ரீ ஸுலக்ஷணாயை நம: ஓம் லக்ஷ்மீப்ரிய ஸக்யை நம: ஓம் ஶ்யாமாயை நம: ஓம் தயாஞ்சித த்ருகஞ்சலாய நம: ஓம் பல்குண்யாவிர்பவாயை நம: ஓம் ரம்யாயை நம: ஓம் தநுர்மாஸ க்ருத வ்ருதாயை நம: ஓம் ஸம்பகாசோக புன்னாகமாலதி விலஸத்கசாயை நம: ஓம் ஆகாரத்ரய ஸம்பந்நாயை நம: ஓம் நாராயண பதாஶ்ரிதாயை நம: ஓம் ஸ்ரீ மதஷ்டாக்ஷரீமந்தர ராஜஸ்தித மநோரதாயை நம: ஓம் மோக்ஷப்ரதான நிபுணாய

ஶ்ரீகோதா சதுஸ்லோகியும், ஶ்ரீராமாநுஜ சதுஸ்லோகியும்

Image
        ஓம் ஸ்ரீ கோதாயை நம:         ஶ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீ அநந்தார்யா மஹா குரவே நம: 🔶 ஸ்வாமி அனந்தாழ்வான் வைபவம் 🔶 அகிலாத்ம குணாவாஸம் அஜ்ஞான திமிராபஹம்| ஆச்ரிதாநாம் ஸுஸரணம் வந்தே அநந்தார்ய தேசிகம்|| ஶ்ரீமத்ராமாநுஜாசார்ய  ஶ்ரீபாதாம் போருஹத்வயம்| ஸதுத்தமாங்க ஸந்தார்யம் அனந்தார்யமஹம் பஜே|| 🔶 ஸ்வாமி இராமானுசர் மீது அளவுகடந்த பக்தி கொண்டவர் ஶ்ரீஅனந்தாழ்வான். இவர், கர்நாடகத்தின் மாண்டியா மாவட்டத்தில் சிறுப்புத்தூர் (இன்றைய கிரங்கனூர் -மேல்கோட்டை அருகில்) எனும் அழகிய சிற்றூரில் சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தில் அனந்தன் என்னும் இயற்பெயரில் பிறந்தவர். (அனந்தாண்பிள்ளை அனந்தாசாரியர், அனந்த சூரி என்ற திருநாமங்களிலும் அறியப்பட்டார்.) அனந்தார்யர் வைஷ்ணவ நெறியில் ஞான ஈர்ப்பு ஏற்பட்டு, தாம் பிறந்த ஊரிலிருந்து , ஶ்ரீவைஷ்ணவ ராஜதானியான திருவரங்கத்தில் உபயவிபூதியையும் ஆட்சி செய்யும் ஸ்வாமி இராமாநுஜரை ஆஶ்ரயித்தார். ஸ்வாமி இராமாநுஜர் திருவரங்கத்தில் அன்றாடம் மாலை நேரத்தில் "திருவாய்மொழி விரிவுரை" நிகழ்த்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒருநாள் “ஒழிவில் காலமெ

கோதையின் கீதை (பகுதி - 33)

Image
"தேடிக்கிடையாத் திரவியத்தைத் தெவிட்டாத அமுதைத் திருமாலைப் பாடிப் பரவும் பசுங்கிளியைப் பவ வெம்பிணி தீர்த்திடும் மருந்தை ஆடிப்பூரத் தவதரித்த அகில நிகமாகம விளக்கைச் சூடிக்கொடுத்த சுடர் கொடியைத் தொழுது வினைக்கு விடை கொடுப்போம்!"  🔹[வரகவி அப்புவைய்யங்கார் என்கிற ஶ்ரீநரசிம்மாச்சாரியார்] 🔹🔸🔷🔶  கோதையின் கீதை  🔶 🔷🔸🔹 🔹சங்க காலத்தில் நிலவிய "திருமால் வழிபாடு" ஆழ்வார்களின் காலத்தில் (கி.பி. ஆறு முதல் எட்டாம் நூற்றாண்டு முடிய) உயர்நிலையடைந்தது. திருமாலைப் பரம்பொருளாகக் கொண்டு ஆழ்வார்கள் பன்னிருவரும் அருளிய பாசுரங்கள், "அருளிச்செயல்" எனவும் 'திவ்வியப்பிரபந்தம்' எனவும் ஶ்ரீவைஷ்ணவர்களால் வழங்கப்படுகின்றன. ஆழ்வார் பாடிய அருட்பாசுரங்களை "ஶ்ரீமந்நாதமுனிகள்" என்னும் வைஷ்ணவ ஆச்சார்யர் அரும்பாடுபட்டுத் தொகுத்தளித்ததாக ஶ்ரீவைஷ்ணவ குருபரம்பரை  நூல் கூறுகின்றது. பாசுரங்களின் எண்ணிக்கையும்  தெய்வத்தன்மையும்     நோக்கி "நாலாயிரத்திவ்வியப் பிரபந்தம்" என்று இத்தொகுப்புக்குப் பெயர் ஏற்பட்டது. எனினும் ஆழ்வார்

கோதையின் கீதை (பகுதி - 32)

Image
 🔷🔶  மார்கழி நீராட்ட உற்ஸவம்  🔷🔶 🔶 இவ்வுற்சவம் தொடங்குவதற்கு முந்தைய நாள் இரவு ஶ்ரீஆண்டாள் சர்வாலங்கார பூஷிதையாக வடபெருங்கோயிலுக்கு எழுந்தருளி வடபத்ரசாயியிடம் மார்கழி நோன்பு நோற்க, அனுமதிகேட்கும் "பிரியாவிடை" நடைபெறுகிறது. ஶ்ரீஆண்டாள், வடபத்ரசயனர் பெரியபெருமாள் சந்நிதியின் மஹாமண்டபத்திற்கு எழுந்தருளி, ஏகாந்த திருமஞ்சனம் கண்டருள்வார். பின்னர் குடை,சாமரங்களுடன், புஷ்பமாரி பொழிய ஸ்வஸ்திவாசனம் கோஷிக்க கைத்தல சேவையாக மூலஸ்தானம் எழுந்தருளுகிறாள்.  ஆண்டாளுக்கும்,வடபெருங்கோயிலுடையானுக்கும் திருவாராதனம், வேதவிண்ணப்பம் நடைபெறும். பின்னர் திருக்கதவம் தாளிடப்படும். அப்போது ஶ்ரீஆண்டாள் மார்கழி நீராட்டத்திற்கு எம்பெருமானிடம் அனுமதி கேட்பதாக ஐதீகம். பின்னர் திருக்கதவம் நீக்க, அரையருக்கு அருளப்பாடு சாதிக்க, அவரும் திருப்பாவை முப்பது பாசுரங்களையும் அமுததொழுக, தாளத்தோடு சேவித்து, முதல்பாட்டுக்கு வியாக்யானம் செய்வார். பின்னர் ஸ்தலத்தார் உற்சவ வைபவம் மற்றும் பஞ்சாங்கம் வாசிப்பர். ஆண்டாள் அங்கிருந்து புறப்பட்டு, பெரியாழ்வார் மங்களாசாசனம் முடிந்து நாச்சியார் திருமாளிகையை அடைவார்.