வெங்கிட்டம்மாள் கைங்கர்யம் (பகுதி - 2)

    
              

                         

உலகில் உள்ள ஜீவாத்மாக்களுக்கு முக்தி தந்து அவர்களை ஆட்கொள்ளும் வல்லமை பெற்ற பரமாத்மாவைச் சரண் புக வேண்டும் என்பதுதான் சரணாகதி.
ஞானயோகம், பக்தியோகம், கர்மயோகம் ஆகிய மூன்றில் எதேனும் ஒன்றின் மூலம் அல்லது அனைத்தின் மூலமும் பரமாத்மாவை அடைவது எளிது. 'மாமேகம் சரணம் வ்ரஜ' என்று கீதையில் பகவான் ஸ்ரீகிருஷ்ணன் அர்ஜுனனிடம் கூறுகிறார். நானே அனைத்தும் என்று உணர்வாய், உணர்ந்து சரண் அடைவாய், மற்றதை நான் பார்த்துக்கொள்கிறேன் என்கிறார்.

ஆனால், இந்த சரணாகதியை நேரடியாக ஒருவரால் அடைய முடியாது. ஆசார்யன் என்ற‌ வழிகாட்டி அவசியம். அவர்தான் பரிபூரண பிரம்மத்தை அனுபவிப்பதற்கான சாதனை வழிமுறைகளைச் சொல்லித் தர முடியும் என்கிற உண்மை நிலையை அறிந்த ஸ்ரீமதி வெங்கிட்டம்மாள் திருவரங்கம் பெரியநம்பி திருமாளிகையில் ஆச்சார்ய அபிமானம் பெற்று திருவடி சம்பந்தம் பெற்றுக்கொண்டார். தாம் பிறந்த மதுரை இராமாயணச்சாவடியில் இராமபிரானுக்கும்,ஆயர்குல திலகமாகிய ஸ்ரீநவநீத கிருஷ்ண ஸ்வாமிக்கும் பல கைங்கர்யங்களைச் செய்ததோடல்லாமல் பாகவத ததீயாராதனங்களை வ்ருத்தி செய்தார்.
இந்தத் தேஹம் அழிந்தால் ஆத்மாவிற்கு பிராட்டிமார்களுடன் ஒப்புமை உண்டு என்பது ஸ்ரீவசனபூஷண திவ்யஸாஸ்த்ரத்தால் அறியப்படுவதாகும். "கந்தல் கிழிந்தால் ஸர்வருக்கும் நாரீணாமுத்தமையுடைய அவஸ்தை வரக்கடவதாய் இருக்கும்" என்று 239ம் சூர்ணிகையில் ஸ்ரீவசணபூஷண திவ்யஸாஸ்திரம் கூறுகிறது.
 பராங்குச நாயகி,பரகாலநாயகி என்றும் ஆழ்வார்கள் நாயகி பாவம் அடைந்ததும் ப்ரசித்தம். 'பக்தி' என்ற தத்துவத்தை பெண்ணாகவே முற்றோதிய ஞானிகளும் அறிவர்.
இக்கலியுகத்தில் 'பக்தமீரா' என்கிற ரஜபுத்திர பெண்  வடநாட்டு ஆண்டாளாகவே கொண்டாடப்பட்டாள்.
நம் சூடிக்கொடுத்த சுடர்கொடியான கோதையின் பாதையில் இராமாநுச தாஸ்யை வெங்கட்டம்மாளும் தனது ஆன்மிக யாத்திரையை தொடர்ந்தார்.




ம.பொ.வீ.பிச்சைக்காரி என்கிற வெங்கிட்டம்மாள்  தர்ம ட்ரஸ்ட் ஸ்ரீநவநீத கிருஷ்ணன் திருக்கோயிலில் நடத்தும்  கைங்கர்யங்கள் விபரம்

•• சித்திரை மாதம் ~ (திருவாதிரை) உடையவர் உத்ஸவம் 10ம் நாள்.

• வைகாசி மாதம் ~
• ஆனி மாதம் ~

•• ஆவணி மாதம் ~ பவித்ரோத்ஸவம் (5நாட்கள்)
ஸ்ரீஜயந்தி 5ம் நாள் கருட சேவை.



•• புரட்டாசி மாதம் ~ நவராத்திரி எட்டாம் நாள்
•• ஐப்பசி மாதம் ~ ஊஞ்சல் உத்ஸவம் 10ம் நாள்.
• கார்த்திகை மாதம் ~
• மார்கழி மாதம் ~

•• தை மாதம் ~ மாட்டுப்பொங்கல் கனு பாரி வேட்டை

• மாசி மாதம் ~
• பங்குனி மாதம் ~

° ப்ரதி மாதம்~ ரோஹிணி நட்சத்திரம் ஸ்ரீநவநீதகிருஷ்ணன்  உள்புறப்பாடு.

° ஸ்ரீஜயந்தி இரண்டாம் நாள் (சிக்யோத்ஸவம்) உறியடி  உத்ஸவத்திற்கென உறிப்பானை(சங்கிலியுடன்) வெங்கிட்டம்மாள் உபயம் ஆகும்.



° தை மாதம் கனு பாரி வேட்டை புறப்பாடு அன்று மாடு பிடித்து வரும் கோபாலர்களுக்கு சாயம் முக்கிய வஸ்திரம் தரப்படுகிறது.
° இராமாயணச் சாவடியில் கிழக்குத் திருமுக மண்டலமாக சந்நதி கொண்டிருக்கும் ஸ்ரீசீதா, லட்சுமண ஹனுமத் ஸமேத ஸ்ரீராமச்சந்திர மூர்த்திக்கு ஸ்ரீராம நவமி மூன்று நாட்கள் திருக்கல்யாண உத்ஸவம்  25 வருடங்களுக்கு மேலாக நடத்தி 'ஸ்ரீநாம ராமாயணம்' புத்தகத்தை பாகவதர்கட்கு வாய் படைத்த பயனைப் பெறுவதற்காக அன்பளிப்பாக தந்தார். அதற்கு பின்பு அவரது ஸ்வீகார புத்திரர் திரு. ம.பொ.வீ. சூரியநாராயணன் அவர்கள்  அக்கட்டளையை செவ்வனே செய்து வருகிறார்.




|| "ஸ்ரீநாம ராமாயணம்"|| எனும் ஸ்தோத்திரம் மத்வஸ்ரீ பண்டிட் லட்சுமணாச்சாரியர் என்ற மகானால்  இயற்றப்பட்டது. இத்தோத்திரம் ஜபிப்பதன் மூலம் இராமாயண பாராயணமும், நாம ஜபமும் ஒருங்கே செய்த திருப்தியுண்டாகிறது.

• ம.பொ.வீ.பிச்சைக்காரி என்கிற வெங்கிட்டம்மாள்  தர்ம ட்ரஸ்ட்  மூலமாக தரப்பட்ட ஸ்ரீநாம ராமாயணம்
Download links:-
MediaFire link:
https://www.mediafire.com/download/p5tb1bwumaqwqmr

அல்லது

https://archive.org/details/subburaji2009_gmail_20180820_1151

ஆணாதிக்க சிந்தனையுடைய அந்தகாலத்தில் தனி ஒரு பெண்ணாய் வெங்கிட்டம்மாள் இவ்வாறு பொது வாழ்க்கையில் தைர்யமாக பகவத் க்ருபையுடன் கைங்கர்யங்களை செயல்படுத்தியது பாராடுக்குரியதே!

அடியேன் ராமாநுச தாஸன்

அன்புடன்

 ஸ்ரீ பா ல சு பி க் ஷ ம்
E.P.I. இராம சுப்பிரமணியன் 


Comments

Popular posts from this blog

சிறுதெய்வங்களோடு வந்த பெருந்தெய்வங்கள் (பகுதி-1)

காலந்தோறும் மதுரை (பகுதி − 1)

கோதையின் கீதை (பகுதி - 33)