ஸ்ரீஉடையவர் திருக்கோயில் (பகுதி - 1)
வைணவ புரட்சித் துறவி ஸ்ரீஉடையவர் -இராமானுசர் (கி.பி.1017-1137) சனாதன (இந்து) சமய தத்துவப் பிரிவுகளில் வேதாந்தத்தின் விளக்கங்களில் ஒன்றான ஸ்ரீவிசிஷ்டாத்துவைதத்தின் விடிவெள்ளியாக விளங்கினவர். இவரே விசிட்டாத்துவைத தத்துவ இயலை இந்தியா முமுவதும் பரப்பினார். சுவாமி விவேகானந்தரும் சிகாகோவில் நடைபெற்ற சர்வமத மாநாட்டில் "Although Adisankara was great by intellect yet Ramanuja's heart and compassion were as wide as the universe ( இராமாநுசரது கொள்கை அறிவுக்கு விருந்தாயிருப்பதோடு மட்டுமின்றி இதயத்தை தொடக்கூடியதாகவும் உள்ளது) என்று உடையவரை பாராட்டினார். அனைத்து மக்களும் வாழப்பிறந்த உடையவர் ஸ்ரீஇராமாநுசர் மனித குல வரலாற்றில் காணப்படும் ஒரு வியப்பூட்டும் தத்துவ மேதை, சமூக புரட்சியாளர், பூவுலகில் வைகுந்தத்தை காட்டிய புனிதர். மனிதாபிமானம் மிக்க சமூகச் சிந்தனையாளர். தாம் ஒரு வேதாந்தியாக மட்டும் வாழ்ந்திடாமல், சமுதாயநலனில் அக்கறை கொண்டவராகவும் திகழ்ந்தார். ஜீவ ஆத்மாக்கள் எல்லாம் ஒரே இனம் என்றும் ஒரே தேவனான ஸ்ரீமந்நாராயணனின் குழந்தைகளே எல்லா உயிர்களும் என்று உலகிற்கு பறை சாற்றி