சிறுதெய்வங்களோடு வந்த பெருந்தெய்வங்கள் (பகுதி-1)
ஒரு கதை சொல்லட்டுமா? ஆலவாய் நகரினுள் அத்திகிரி வரதன்,திருக்கச்சி ஏகாம்பரநாதன்,சோலைமலை அழகன் ஆகிய பெருந்தெய்வங்களை சிறு தெய்வங்களாக வழிபட்டு வரும் கதையை சொல்லட்டுமா? பாண்டிமா தேவி அங்கயற்கண்ணி தன்னோடு அமர்ந்த ஆலவாய் நகரினுள், புட்டுக்கு மண் சுமந்த லீலாவிநோதனான சோம சுந்தரேஸ்வரரின் ராஜாங்க நகரான சிவராஜதானியென்றழைக்கப்படும் மதுரை நகரிலே பிரசித்தி பெற்ற வடக்கு மாசி வீதி இராமாயணச்சாவடிக்கு அருகேயுள்ள ஒருசிறு தெய்வக்கோயிலுக்குச் செல்வோம். வாருங்கள்! அதற்கு முன்பு முதலில் சிறுதெய்வம் மற்றும் பெருந்தெய்வம் பற்றிய விளக்கங்களை அறிந்து கொள்வோம். சிறுதெய்வம் என்று சொல்லும் பொழுதே பெருந்தெய்வம் என்ற ஒன்றும் இருப்பதாகக் கருத்து அமைவது தவிர்க்க இயலாததாகும். மனித சமூகத்தில் உயர்வு, தாழ்வு என்ற பாகுபாடு தோன்றி வளர்ந்துள்ளதைப் போலவே, மனிதப் பண்பாட்டைப் பிரதிபலிக்கும் வழிபாட்டிலும் பெருந்தெய்வ வழிபாடு, சிறுதெய்வ வழிபாடு என்ற பாகுபாடு நிலவி வருகிறது. சமூகத்தின் அடித்தட்டு மக்களால் வழிபடப்படும் தெய்வங்கள் சிறுதெய்வங்களாகவும், மேல்தட்டு மக்களால் வழிபடப்படும் தெய்வங்கள் பெருந்தெய்வங்களாகவும் தனித
Comments
Post a Comment