காலந்தோறும் மதுரை (பகுதி − 1)
🔸மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப் பூவொடு புரையும், சீர் ஊர்; பூவின் இதழகத்து அனைய தெருவம்; இதழகத்து அரும் பொகுட்கு அனைத்தே, அண்ணல் கோயில்; தாதின் அனையர், தண் தமிழ்க் குடிகள்; தாது உண் பறவை அனையர், பரி சில் வாழ்நர்; பூவினுள் பிறந்தோன் நாவினுள் பிறந்த நான்மறைக் கேள்வி நவில் குரல் எடுப்ப ஏம இன் துயில் எழிதல் அல்லதை, வாழிய வஞ்சியும் கோழியும் போலக் கோழியின் எழாது, எம் பேர் ஊர் துயிலே. நூல்: பரிபாடல் திரட்டு (8) / புறத்திரட்டு (பாடல் விளக்கம்:எமது அழகிய மதுரை, மாயோனது கொப்பூழில் மலர்ந்த தாமரையை ஒக்கும். மதுரையின் தெருக்கள் அத்தாமரையின் இதழ்களை ஒக்கும். மதுரையின் நடுவில் அமைந்துள்ள அண்ணல் கோயில் அம்மலரின் நடுவில் உள்ள தாதை ஒக்கும். சுற்றி வாழும் தண்டமிழ் மக்கள், அந்தத் தாதின் மகரந்தத் தூளை ஒப்பர். அவரை நாடி பரிசில் பெற வரும் இரவலர், அந்த மகரந்தத்தை உண்ண வரும் பறவைகளை ஒப்பர். அந்தத் தாமரைப் பூவின் கண் தோன்றிய பிரம்ம தேவனின் நாவிலே தோன்றிய நான் மறைகளை, வைகறைப் பொழுதில் ஓதும் இசையே, மதுரை மாநகர மக்களாகிய எங்களைத் துயிலேழுப்புமே தவிர , சேரனது வஞ்சியும் , சோழனது கோழியும் (உ