Posts

Showing posts from 2018

கோதையின் கீதை (பகுதி - 28)

Image
            • முத்துக்குறி உற்சவம்  (ஆடிப்பூர ப்ரம்மோற்சவம் பத்தாம் நாள்)- (அரையர் சேவை)   • சிங்கம்மாள் குறடு என்ற ஒரு இடத்தில் தான் இது நடக்கும்! தலைவியின் அம்மா, தன் பெண், பெருமாள் மேல் காதல் கொண்டு, இப்படி உருகி உருகி மெலிகிறாளே என்று ஏக்கப்படுவாங்க!  "இரக்கம் இல்லாத பெருமாளே"ன்னு காய்வாய்ங்க. "வாணுதல் இம் மடவரல், உம்மைக் காணும் ஆசையுள் நைகின்றாள், விறல் வாணன் ஆயிரந்தோள் துணித்தீர், உம்மைக் காண நீர் இரக்கம் இல்லீரே." பின்னர், கட்டுவிச்சி என்னும் குறத்தி வந்து முத்துக்குறி சொல்லுவாள்.  அது என்ன முத்துக்குறி?  முறத்தில் முத்தைப் பரப்பி, பாடிக்கிட்டே, எண்ணி என்ணிக் குறி சொல்லுவாள் குறத்தி! மாலையில் தொடங்கி இரவெல்லாம் தொடர்ந்து விடிய விடிய நடக்கும் இந்த உற்சவம். அரையர்களே, தங்களை அலங்கரித்துக் கொண்டு, தாளங்கள் தட்டி, தமிழ்ப் பாசுரங்கள் இடையே முழங்க, ஆடி அபிநயித்துக் காட்டுவார்கள்!   பத்தாம் நாள் சப்தாவரணம் முடிந்த பிறகு முத்துக்குறி உற்சவம் நடைபெறுகிறது. ஸ்ரீஆண்டாள் செட்டியக்குடித் தெருப்பெண் உருவில் காட்சியளிப்பாள். ஸ்ரீநாதமுனிகள் ப

கோதையின் கீதை (பகுதி - 27)

Image
• ஆண்டாள் மடியில் ரங்கமன்னார் சயன சேவை  ஸ்ரீவில்லிப்புத்தூர் கோயில் ஆடித்திருவிழாவின் 7ம் நாளில் ஸ்ரீரங்கமன்னார் சுவாமி, ஸ்ரீஆண்டாளின் மடியில் சயனித்த கோலத்தில் அருளுவதைக் காணலாம். இவ்வூர் கிருஷ்ணன் கோயிலில் இந்த நிகழ்ச்சி நடக்கும். இந்த தரிசனம் மிகவும் விசேஷமானது. இதனால்  தம்பதியரிடையே ஒற்றுமையை வலுப்படுத்தக் கூடியது என்பது ஐதீகம். ஏழாம் நாள் காலையில் ஸ்ரீஆண்டாள் அரங்கமன்னார் தங்கத் தோளுக்கினியானில் வழக்கமாக வருகிற வீதி உலாக்களையும் சேர்த்து, சில புதிய தெருக்களில் எழுந்தருளி, இரவில் ஸ்ரீகிருஷ்ணன் கோவிலில் எழுந்தருளுகின்றனர். • (ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில் நிலையம் போகும் பாதையில் ஸ்ரீ கிருஷ்ணன் கோயில் உள்ளது. இக்கோயிலில் கர்ப்பகிருகம், அர்த்தமண்டபம், இரண்டு பிராகாரங்கள் இருக்கின்றன. கர்ப்பகிருகத்தில் ருக்மிணி, சத்யபாமா சமேத ஸ்ரீநவநீதகிருஷ்ணன் எழுந்தருளியிருக்கிறார். இக்கோயிலின் முழுமையடையாத  ராஜகோபுரமானது 'ஸ்ரீகிருஷ்ணதேவராயர்' காலத்து திருப்பணியென்பர்.) •  அங்கே சயனத் திருக்கோலம் நடைபெறுகிறது. ஸ்ரீ ஆண்டாள் தொடையில் இராஜகோலத்திலுள்ள ஸ்ரீரங்கமன்னாரின் "சயனத்தி

கோதையின் கீதை ( பகுதி - 26 )

Image
             •  ஐந்து கருட சேவை          திருவாடிப்பூர உற்சவம் 5ம் திருநாளன்று ஐந்து கருட சேவை நடைபெறும். பெரிய தங்க அன்னவாகனத்தில் ஸ்ரீஆண்டாளும், சிறிய அன்னவாகனத்தில் ஸ்ரீபெரியாழ்வாரும், ஸ்ரீவில்லிபுத்தூரில் கோயில் கொண்டிருக்கும் பெரியபெருமாள் (வடபத்திரசாயீ), மற்றும் ஸ்ரீரங்கமன்னார், மற்றும் செண்பகத்தோப்பு காட்டழகர் (சுந்தரராஜப் பெருமாள்), ஸ்ரீவி.திருவண்ணாமலை ஸ்ரீநிவாசப் பெருமாள், திருத்தங்கல் அப்பன் ஆகிய ஐந்து பெருமாள்களும் தனித்தனி தங்க கருட வாகனத்திலும் ஆக இந்த ஏழுவரும் எட்டு வீதிகளில் சுற்றி புறப்பாடு கண்டருளுவர். ஆண்டாள் இந்த ஐந்து பெருமாள்களை மட்டுமே  பதிகமாக மங்களாசாசனம் செய்துள்ளாள். இந்த ஐந்து கருடசேவை பற்றி சுவையான ஓர் செய்தி! பூமிதேவியின் அம்சமான சத்யபாமா ஒருநாள் பஞ்சபாண்டவர்களின் பத்தினியாகிய திரௌபதியைப் பார்த்து ஐவர்க்கு மனையாள் என்பதை பரிகசிக்க கோபம் கொண்ட அவள் சத்யபாமாவை "தன்னைப் போல ஐவரைப் பதியாக அடைக!" எனச் சாபமிட்டாளாம். அச்சாபத்தின் காரணமாக பூமிபிராட்டியான சத்யபாமா பட்டர்பிரான் பெரியாழ்வார் நந்தவனத்தில் ஸ்ரீஆண்டாளாக அவதரித்து, சாபத்தின்படி ஐந்து

கோதையின் கீதை (பகுதி -25)

Image
🔶  திருஆடிப்பூரம் பிரம்மோற்சவம். 🔶 ஸ்ரீவில்லிபுத்தூர் கோதை ஸ்ரீஆண்டாள் திருக்கோயிலில் வைகானஸ ஆகம முறைப்படி மொத்தம் 12 திருநாட்கள் திருஆடிப்பூர உற்சவம் நடைபெறுகிறது. வழக்கம் போல் திருப்பூர நந்தவனத்தில் ம்ருத்சங்க்ரஹணம் மற்றும் த்வஜஸ்தம்ப மண்டபத்தில் கொடி ஏற்றம், என சேனை முதலியார் புறப்பாட்டுடன் உற்சவம் தொடங்குகிறது. 🔹முதல் நாள் அன்று இரவு ஸ்ரீஆண்டாள்-ஸ்ரீரங்கமன்னார் 16வண்டிச்சப்பரத்தில் திருவீதிப் புறப்பாடு கண்டருளுவர். 🔹இரண்டாம் நாள் இரவு ஸ்ரீஆண்டாள் - சந்திரப்ரபை வாகனம்; ஸ்ரீரங்கமன்னார் - சிம்மவாகனம்; 🔹மூன்றாம் நாள் இரவு ஸ்ரீஆண்டாள் - தங்கப்பரங்கி நாற்காலி       வாகனம்; ஸ்ரீரங்கமன்னார் - அனுமார் (சிறிய திருவடி ) வாகனம்; 🔹நான்காம் நாள் இரவு ஸ்ரீஆண்டாள் - சேஷ வாகனம்; ஸ்ரீரங்கமன்னார் - கோவர்த்தனகிரி; 🔹ஐந்தாம் நாள் காலை ஐந்து பெருமாள் ஆண்டாளுடன் பெரியாழ்வாருக்கு மங்களாசாசனம் நடைபெறும். இரவு ஸ்ரீஆண்டாள் - அன்னவாகனம்; ஸ்ரீரங்கமன்னார் உள்பட ஐந்து பெருமாள்களும் ஐந்து கருட சேவை நடைபெறும். 🔹ஆறாம்  நாள் இரவு ஸ்ரீஆண்டாள் - கனகதண்டியல்          வாகனம்; ஸ்ரீரங்கமன்